Enable Javscript for better performance
சீன ஓபன்: அரையிறுதியில் சானியா ஜோடி- Dinamani

சுடச்சுட

    

    சீன ஓபன்: அரையிறுதியில் சானியா ஜோடி

    By dn  |   Published on : 04th October 2012 11:25 PM  |   அ+அ அ-   |    |  

    sania

    சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் அரையிறுதிக்கு இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்பெயினின் நூரியா லகோஸ்டீரா ஜோடி முன்னேறியுள்ளது.

    சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் இப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் சானியா-நூரியா ஜோடி 4-6, 6-4, 16-14 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜ்-செக்.குடியரசின் பர்போரா ஜோடியை வீழ்த்தியது.

    காலிறுதியில் பூபதி-போண்ணா: ஆடவர் இரட்டையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி-ரோஹன் போபண்ணா ஜோடி 6-3, 6-0 என்ற நேர் செட்களில் சீனாவின் வைல்டுகார்ட் ஜோடியான மாவ் ஜின் காங்-ஜங் ஜீ ஜோடியை வீழ்த்தியது. இதன்மூலம் இந்திய ஜோடி காலிறுதியை உறுதி செய்தது.

    2-வது சுற்றில் பயஸ்-ரடேக்: ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் விளையாடிய இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டீபானேக் ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்லோவேகியாவின் ஃபிலிப் போலாசெக்-ஆஸ்திரியாவின் ஜூலியன் நோவ்லே ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    இரு ஜோடிகளும் அபாரமாக ஆடியதால் இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 17 நிமிடங்கள் நீடித்தது.

    பயஸ் ஜோடி தங்களின் 2-வது சுற்றில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே-ஜேமி முர்ரே சகோதரர்கள் ஜோடியை சந்திக்கவுள்ளது.

    kattana sevai