Enable Javscript for better performance
ஃபெடரருக்கு கொலை மிரட்டல்- Dinamani

சுடச்சுட

    

    ஃபெடரருக்கு கொலை மிரட்டல்

    By dn  |   Published on : 06th October 2012 12:25 AM  |   அ+அ அ-   |    |  

    spt3

    உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரருக்கு சீனாவில் இணையதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    "புளூ கேட் பாலிதீஸ்டிக் ரிலிஜியன் பவுண்டர் 07' என்ற பெயரில் வலைப்பூ மூலம் கடந்த மாதமே இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில், டென்னிûஸ முற்றிலும் அழிப்பதற்காக அக்டோபர் 6-ம் தேதி ஃபெடரரை கொலை செய்யவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

    மேலும் ஃபெடரர் தலையில்லாமல் முழங்கால் போட்டு நிற்பது போன்றும், அவருக்கு அருகில் முகமூடி அணிந்த ஒருவர் கறுப்பு உடையில் கோடாரியுடன் நிற்பது போன்றும் ஒரு படம் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் விளையாடுவதற்காக சீனாவின் ஷாங்காய் நகருக்கு குடும்பத்தினருடன் வந்துள்ள ஃபெடரருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ஷாங்காய் மாஸ்டர்ஸ் போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், "இது வெறும் மிரட்டல் மட்டுமே. மிரட்டல் விடுத்தவர் அதுபோன்ற நடவடிக்கையில் இறங்கமாட்டார் என்று நம்புகிறோம். எனினும் இதை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம். ஃபெடரருக்கு உயர் பாதுகாப்பு அளிக்கும்படி உள்ளூர் போலீûஸ கேட்டுக்கொண்டுள்ளோம். அதேநேரத்தில் மற்ற வீரர்களுக்கும் அதிக பாதுகாப்பு அளிக்கப்படும்' என்றனர்.

    டென்னிஸ் மிகவும் அமைதியான, நாகரிகமான விளையாட்டாகும். அதனால் டென்னிஸ் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது மிகவும் அரிது. 1993-ம் ஆண்டு ஹம்பர்க்கில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியின்போது யூகோஸ்லாவியா டென்னிஸ் வீராங்கனை மோனிகா செலûஸ, ஸ்டெபி கிராபின் தீவிர ரசிகர் ஒருவர் கத்தியால் குத்தினார். அதுதான் டென்னிஸில் நிகழ்ந்த பெரிய அசம்பாவிதம்.

    அதன்பிறகு 2009 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் விளையாடிய ஃபெடரருக்கு ரசிகர் ஒருவர் தொப்பி அணிய முயன்றார். இதைத்தவிர டென்னிஸில் பெரிய அளவுக்கு பிரச்னைகள் ஏதும் நிகழ்ந்ததில்லை. ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி வரும் 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஷாங்காய் நகரில் நடைபெறுகிறது.

    பாதுகாப்பு அதிகரிப்பு: ஃபெடரருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஷாங்காய் மாஸ்டர்ஸ் போட்டிக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக விசாரித்து வருவதாக சீனாவில் உள்ள இணையதள குற்றத்தடுப்பு பிரிவு கூறியுள்ளது.

    kattana sevai