Enable Javscript for better performance
சாம்பியன்ஸ் லீக் இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சாம்பியன்ஸ் லீக் இன்று தொடக்கம்

    By தினமணி  |   Published on : 13th October 2012 03:05 AM  |   அ+அ அ-   |    |  

    சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் பிரதான சுற்று தென் ஆப்பிரிக்காவில் சனிக்கிழமை தொடங்குகிறது.

    10 அணிகள் கலந்து கொள்ளும் இப்போட்டியின் முதல் ஆட்டம் செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இப்போட்டியில் இந்திய பிரீமியர் லீக்கைச் (ஐபிஎல்) சேர்ந்த மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த அணிகளைத் தவிர தென்னாப்பிரிக்காவின் டைட்டன்ஸ், ஹைவெல்டு லயன்ஸ் அணிகளும், ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ், சிட்னி சிக்ஸர்ஸ் அணிகளும்,  தகுதிச்சுற்றில் வெற்றி பெற்ற ஆக்லாந்து ஏசஸ், யார்க்ஷயர் அணிகளும் பிரதான சுற்றில் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.

    ஐபிஎல் அணிகள்: நடப்புச் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறையும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. அதேபோல் நடப்பு ஐபிஎல் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றி தங்களது பலத்தை மீண்டும் நிரூபிக்க முயற்சிக்கும்.

    இருமுறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இக்கோப்பையை வென்று தனது ரசிகர்களை திருப்திப்படுத்த முயற்சிக்கும். அதேசமயம் ஜெயவர்த்தனா தலைமையில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியும் மற்ற அணிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சிறப்பாக விளையாடும். காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள சேவாக் அணியில் இணைந்திருப்பது அந்த அணிக்குக் கூடுதல் பலம்.

    மற்ற அணிகள்: தென் ஆப்பிரிக்க அணிகளான டைட்டான்ஸ், ஹெவெல்டு லயன்ஸ் அணிகள் சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் ஆடுவது கூடுதல் பலமாக இருக்கும்.

    ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கிப்ஸ் இணைந்துள்ளார்.

    இந்தப் போட்டியை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளதாக கூறியுள்ள அவர் இது மற்றுமொரு சிறந்த தொடக்கமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    வாட்சன், மிச்செல் ஸ்டார்க், ஹேடின் உள்ளிட்ட வீரர்களைக் கொண்ட சிட்னி சிக்ஸர்ஸ் அணி கோப்பையை வெல்லக் கூடிய அணியாகக் கருதப்படுகிறது.

    தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் பிரதான சுற்றில் களமிறங்குகிறது ஆக்லாந்து ஏசஸ் மற்றும் யார்க்ஷயர் அணிகள்.

    தொடக்கம்: சனிக்கிழமை தொடங்கும் முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் டைட்டான்ஸ் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர்ச்சர்ஸ் அணியுடனும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி டேர் டெவில்ஸ் அணியை எதிர்த்தும் விளையாடுகின்றன.

    பிரதான சுற்றில் விளையாடும் இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

    போட்டி அட்டவணை விவரம்:
    அக் 13 டைட்டன்ஸ்-பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ் மாலை 5 மணி

    அக் 13 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- டெல்லி டேர் டெவில்ஸ் இரவு 9 மணி

    அக் 14 சென்னை சூப்பர் கிங்ஸ்-சிட்னி சிக்ஸர்ஸ் மாலை 5 மணி   

    அக் 14 லயன்ஸ்-மும்பை இண்டியன்ஸ் இரவு 9 மணி

    அக் 15 ஆக்லாந்து-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரவு 9 மணி 

    அக் 16 சிட்னி சிக்ஸர்ஸ்-யார்க்ஷயர் மாலை 5 மணி

    அக் 16 சென்னை சூப்பர் கிங்ஸ்-லயன்ஸ் இரவு 9 மணி

    அக் 17 ஆக்லாந்து-டைட்டன்ஸ் மாலை 5 மணி  

    அக் 17 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ் இரவு 9 மணி

    அக் 18 லயன்ஸ்-சிட்னி சிக்ஸர்ஸ் மாலை 5 மணி

    அக் 18 மும்பை இண்டியன்ஸ்-யார்க்ஷயர் இரவு 9 மணி

    அக் 19 ஆக்லாந்து-டெல்லி டேர் டெவில்ஸ் இரவு 9 மணி

    அக் 20 லயன்ஸ்-யார்க்ஷயர் மாலை 5 மணி

    அக் 20 சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இண்டியன்ஸ் இரவு 9 மணி

    அக் 21 பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ்-டெல்லி டேர் டெவில்ஸ் மாலை 5 மணி

    அக் 21 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-டைட்டன்ஸ் இரவு 9 மணி

    அக் 22 சென்னை சூப்பர் கிங்ஸ்-யார்க்ஷயர் மாலை 5 மணி

    அக் 22 சிட்னி சிக்ஸர்ஸ்-மும்பை இண்டியன்ஸ் இரவு 9 மணி

    அக் 23 ஆக்லாந்து-பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ் மாலை 5 மணி

    அக் 23 டெல்லி டேர் டெவில்ஸ்-டைட்டன்ஸ் இரவு 9 மணி 

    அக் 25 முதல் அரையிறுதி இரவு 9 மணி

    அக் 26 இரண்டாவது அரையிறுதி இரவு 9 மணி

    அக் 28 இறுதி ஆட்டம் இரவு 9 மணி

     

    அணிகள் விவரம்

    பிரிவு "ஏ'

    டெல்லி டேர் டெவில்ஸ்,

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,

    ஆக்லாந்து ஏசஸ்,

    பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ்,

    டைட்டன்ஸ்.

     

    பிரிவு "பி'

    சென்னை சூப்பர் கிங்ஸ்,

    மும்பை இண்டியன்ஸ்,

    ஹெவெல்டு லயன்ஸ்,

    சிட்னி சிக்ஸர்ஸ்,

    யார்க்ஷயர்.

     

    இன்றைய ஆட்டம்

    டைட்டன்ஸ்-ஸ்கோர்ச்சர்ஸ்

    நேரம்: மாலை 5 மணி,

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-டெல்லி டேர் டெவில்ஸ்

    நேரம்: இரவு 9 மணி.

    நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் கிரிக்கெட்.

    kattana sevai