Enable Javscript for better performance
பைனல் மாஸ்டர்ஸ்: ஆனந்தின் டிரா தொடர்கிறது- Dinamani

சுடச்சுட

    

    பைனல் மாஸ்டர்ஸ்: ஆனந்தின் டிரா தொடர்கிறது

    By தினமணி  |   Published on : 13th October 2012 03:00 AM  |   அ+அ அ-   |    |  

    sptanand1

    ஸ்பெயினின் பில்பாவ் நகரில் நடைபெற்று வரும் 5ஆவது பைனல் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டியில் 8ஆவது சுற்றிலும் விஸ்வநாதன் ஆனந்த் டிரா செய்தார்.

    இப்போட்டியின் 8ஆவது சுற்றில் இத்தாலியின் பேபியானோவுடனான ஆட்டத்தில் உலக செஸ் சாம்பியன் ஆனந்த் டிரா செய்தார். இதுவரை தான் ஆடிய 8 சுற்றுகளில் டிரா செய்ததன் மூலம் 8 புள்ளிகளைப் பெற்று 4ஆவது இடத்தில் உள்ளார்.

    8ஆவது சுற்றின் மற்ற இரு ஆட்டங்களும் டிரா ஆனதால் தரப்பட்டியலில் எவ்வித மாற்றமும் இல்லை. 

    இத்தாலியின் பேபியானோ, நார்வேயின் மாக்னஸ் கார்ல்ùஸன் ஆகியோர் தலா 13 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியன் 10 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் 6 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், ஸ்பெயினின் வாலிஜோ போன்ஸ் 5 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.

    வெற்றி வாய்ப்பு: இன்னும் 2 சுற்றுகளே மீதமுள்ள நிலையில் இப்போட்டியில் ஆனந்த் வெற்றி பெறுவது மிகக் கடினம். அடுத்து வரும் இரு சுற்றுகளிலும் ஆனந்த் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளைப் பெறுவார். ஆனால் ஏற்கெனவே பேபியானோ, கார்ல்ùஸன் ஆகியோர் 13 புள்ளிகளுடன் உள்ளனர். அடுத்து இரு ஆட்டங்களிலும் இவர்கள் டிரா செய்தால் கூட ஆனந்த் சாம்பியனாக முடியாது.

    kattana sevai