Enable Javscript for better performance
சச்சினுக்கு ஆஸ்திரேலிய விருது: மேத்யூ ஹேடன் அதிருப்தி- Dinamani

சுடச்சுட

    

    சச்சினுக்கு ஆஸ்திரேலிய விருது: மேத்யூ ஹேடன் அதிருப்தி

    By dn  |   Published on : 19th October 2012 11:18 PM  |   அ+அ அ-   |    |  

    matthew

    ஆஸ்திரேலியாவின் உயரிய விருது இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு வழங்கப்படுவதற்கு ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேடன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான "மெம்பர்ஷிப் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஆஸ்திரேலியா' விருது சச்சினுக்கு வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஜூலியா கிலார்டு அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக ஹேடன் மேலும் கூறியிருப்பது:

    ஆஸ்திரேலியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த விருது, சச்சினுக்கு வழங்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவர் ஆஸ்திரேலியாவில் இருந்தால் அவருக்கு பிரதமரின் விருதே வழங்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் இந்தியாவில் வசிக்கிறார் என்பதுதான் உண்மை. சச்சினுக்கு வழங்கப்படவுள்ள விருது ஆஸ்திரேலியர்களுக்கு மட்டுமே வழங்கப்படக்கூடிய விருது என்று நினைக்கிறேன். எனினும் அது உறுதியாகத் தெரியவில்லை. இந்த விருதை மிகவும் புனிதமானதாக ஆஸ்திரேலியர்கள் கருதுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    kattana sevai