Enable Javscript for better performance
ஃபார்முலா 1 பயிற்சி போட்டியிலும்- Dinamani

சுடச்சுட

    

    ஃபார்முலா 1 பயிற்சி போட்டியிலும்

    By dn  |   Published on : 27th October 2012 12:40 AM  |   அ+அ அ-   |    |  

    spt2

    ஃபார்முலா 1 (எஃப்1) கார் பந்தயத்தின் இந்திய கிராண்ட்ப்ரீ பயிற்சி போட்டியில் ரெட்புல் அணி வீரர் செபாஸ்தியான் விட்டல் முதலிடம் பிடித்தார்.

    நொய்டாவில் உள்ள புத் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2 பயிற்சிப் போட்டிகளிலும் விட்டல் முதலிடத்தைப் பிடித்தார்.

    முதலாவது பயிற்சிப் போட்டியில் விட்டல், 1 நிமிடம் 26.211 நொடியில் பந்தய தூரத்தைக் கடந்தார். இவரைத் தொடர்ந்து மற்றொரு ரெட்புல் வீரர் மைக்கல் வெபர் 2ஆவது இடத்தைப் பிடித்தார்.

    இப்போட்டியின் ஒரு கட்டத்தில் ஃபெராரி வீரர் ஃபெர்னான்டோ அலோன்சா முதலிடத்தைப் பிடிப்பார் என்ற நிலை நிலவியது. விட்டலுக்கும் அலோன்சாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் விட்டலே முதலிடத்தைப் பிடித்தார். 1 நிமிடம் 26.820 விநாடிகளில் தூரத்தைக் கடந்த அலோன்சா 3ஆம் இடத்தையே பிடித்தார்.

    இந்திய நிறுவனமான சஹாரா ஃபோர்ஸ் வீரர் நிகோ ஹல்கென்பெர்க் 8ஆவது இடத்தைப் பிடித்தார். சஹாராவின் மற்றொரு வீரர் பால் டீ ரெஸ்டா 11ஆவது இடத்தைப் பிடித்தார். மைக்கேல் ஷூமேக்கர் 15ஆவது இடத்தைப் பிடித்தார்.இந்திய வீரர் நரேன் கார்த்திகேயன் 1 நிமிடம் 32.125 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 22ஆவது இடத்தைப் பிடித்தார்.

    kattana sevai