சுடச்சுட

  
  spt6

  நியூயார்க், ஆக. 31: யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியுடன் சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அமெரிக்காவின் ஆன்டி ரோடிக் அறிவித்துள்ளார்.

  2003-ம் ஆண்டில் யு.எஸ். ஓபன் சாம்பியனான அவர், தரவரிசையில் முதலிடத்திலும் இருந்துள்ளார். 30-வயதாகும் அவர், 12 ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வருகிறார். இப்போது தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ளார்.

  ஓய்வை அறிவித்துப் பேசிய அவர், எனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஓய்வை அறிவித்துள்ளேன். இதற்கு மேலும் சிறப்பாக விளையாட முடியும் என்று நினைக்கவில்லை. பெடரர், நடால், ஜோகோவிச் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்கள் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

  டென்னிஸ் தவிர எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இனி குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடுவேன் என்றார்.

  ரோடிக் சிறந்த வீரர் என்றாலும், அவரால் ஒருமுறைதான் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல முடிந்தது. விம்பிள்டனில் 3 முறை இறுதிச் சுற்றுக்கு முன்னேறினாலும், அனைத்திலும் ரோஜர் பெடரரிடம் தோல்வியடைந்தார். இதுவரை 32 பட்டங்களை அவர் வென்றுள்ளார். இப்போது பங்கேற்றுள்ள யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் அடுத்த சுற்றில் ஆஸ்திரேலியாவின் பெர்னார்ட் டாமிக்கை, ரோடிக் எதிர்கொள்ள இருக்கிறார்.

  பெல்ஜியத்தின் கிம் கிளிஸ்டர்ஸ், புதன்கிழமை தனது ஓய்வை அறிவித்தார். அதற்கு அடுத்த நாளில் ஆன்டி ரோடிக்கும், ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai