சுடச்சுட

  
  spt7]

  புது தில்லி, ஆக. 31: அடுத்த 6 மாதங்கள் பாட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்பதில்லை என்று ஜுவாலா கட்டா முடிவு செய்துள்ளார்.

  இதையடுத்து அவருடன் மகளிர் இரட்டையர் பிரிவில் சேர்ந்து விளையாடும் அஸ்வினி பொன்னப்பா, வேறு ஜோடியைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

  காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ஜுவாலா - அஸ்வினி ஜோடியால், ஒலிம்பிக்கில் வெற்றி பெற முடியவில்லை.

  இந்நிலையில் 6 மாதங்கள் ஓய்வெடுக்க ஜுவாலா முடிவு செய்துள்ளார்.

  இது தொடர்பாக அவருடன் சேர்ந்து விளையாடும் அஸ்வினி கூறியது:

  அடுத்த 6 மாதங்கள் ஓய்வு எடுக்க இருப்பதால் என்னுடன் சேர்ந்து விளையாட வாய்ப்பில்லை என்று ஜுவாலா கூறியுள்ளார். எனவே புதிய ஜோடி கிடைக்கும் வரை கலப்பு இரட்டையர் போட்டியில் மட்டும் பங்கேற்க இருக்கிறேன்.

  வரும் மாதங்களில் சீனா, ஜப்பானுக்கு எதிரான முக்கியப் போட்டிகளில் விளையாடவுள்ளேன் என்றார் அஸ்வினி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai