சுடச்சுட

  
  spt3

  பெங்களூர், ஆக. 31: இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 450 ரன்கள் வரை எடுப்போம் என்று நியூஸிலாந்து தொடக்கவீரர் மார்டின் கப்டில் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

  பெங்களூரில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் நியூஸிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்துள்ளது. முதல் நாள் ஆட்டம் முடிந்த பின் கப்டில் கூறியது:

  2-வது நாளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி 450 ரன்கள் வரை எடுப்போம் என்ற நம்பிக்கையுள்ளது. அதன் பிறகு இந்திய விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி அவர்களுக்கு நெருக்கடி அளிப்போம்.

  முதல் டெஸ்ட்டில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள தடுமாறியது உண்மைதான். ஆனால் இந்த டெஸ்டில் அதனை சமாளித்து சிறப்பாக விளையாடியுள்ளோம். முதல் நாளில் 300 ரன்களுக்கு மேல் எடுத்தது மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது.

  இந்திய அணியின் பந்து வீச்சை ஆக்ரோஷத்துடன் எதிர்கொள்ள வேண்டுமென கேப்டன் டெய்லர் எங்களுக்கு அறிவுரை கூறியிருந்தார். இந்த ஆட்டத்தில் அவர் சிறப்பாக விளையாடி சதமடித்துள்ளது அனைத்து பேட்ஸ்மேன்களுக்குமே உத்வேகம் அளித்துள்ளது.

  எங்கள் பந்து வீச்சாளர்கள் இந்திய வீரர்களை விரைவில் ஆட்டமிழக்கச் செய்வார்கள். இதன் மூலம் எங்களது வெற்றி வாய்ப்பு அதிகமாகும். டெஸ்ட் தொடரை இழந்து விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறோம் என்றார் கப்டில்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai