சுடச்சுட

  
  spt3

  சர்வதேச கிரிக்கெட்டில் 23 ஆண்டுகளாக பங்கேற்று வரும் சச்சின் சாதனைகள் பலவற்றை தனதாக்கியுள்ளார். இந்நிலையில் மாமா - மருமகனால் அவுட் ஆக்கப்பட்ட ஒரே வீரர் என்ற வித்தியாசமான அனுபவத்தை அவர் பெற்றுள்ளார்.

  பெங்களூர் டெஸ்டில் டக்ளஸ் பிரேஸ்வெல் பந்தில் சச்சின் அவுட் ஆனார். இவர் நியூஸிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜானின் சகோதரியின் மகன் ஆவார். 1990-ம் ஆண்டில் நியூஸிலாந்து அணியில் ஜான் இருந்தார். அப்போது கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற டெஸ்டில் சச்சினை, ஜான் அவுட் ஆக்கினார்.

  இப்போது சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின் அவரது மருமகனும் நியூஸிலாந்து அணியில் பங்கேற்று சச்சினுக்குப் பந்து வீசி அவரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

  1989-ம் ஆண்டில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக பங்கேற்ற சச்சின், 23 ஆண்டுகளைக் கடந்து இப்போது வரை தொடர்ந்து விளையாடி வருவதே இதுபோன்ற ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளுக்கு

  காரணம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai