சுடச்சுட

  
  spt2

  பெங்களூர், செப். 1: நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்துள்ளது.

  விராட் கோலி 93 ரன்களுடனும், தோனி 46 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

  முன்னதாக நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 365 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

  6 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் என்ற முதல்நாள் ஸ்கோருடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை நியூஸிலாந்து சனிக்கிழமை தொடர்ந்தது. விக் 63 ரன்களுடனும், பிரேஸ்வெல் 30 ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஸ்கோர் 345 ஆக இருந்தபோது 71 ரன்களில் விக் வெளியேறினார். சிறிது நேரத்திலேயே பிரேஸ்வெல் 43 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

  பின்னர் செüதி 14, படேல் 0, போல்ட் 2 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் நியூஸிலாந்தின் முதல் இன்னிங்ஸ் 365 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

  இந்திய அணியில் ஓஜா 5 விக்கெட்டுகளையும், ஜாகீர் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். உமேஷ் யாதவ், அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

  தொடக்கம் தடுமாற்றம்: அடுத்து கம்பீர், சேவாக் ஆகியோர் இந்தியாவின் முதல் இன்னிங்ûஸ தொடங்கினர். 2 ரன் எடுத்திருந்த நிலையில் கம்பீர், செüதி பந்தில் ஸ்டெம்புகளை இழந்து வெளியேறினார். முதல் டெஸ்ட் ஆட்டத்தில் சதமடித்த புஜாரா இந்த ஆட்டத்தில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

  சச்சின் ஏமாற்றம்: இதையடுத்து சச்சின் களமிறங்கினார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சேவாக் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 50 பந்துகளை சந்தித்த சச்சின் 17 ரன்களில் பிரேஸ்வெல் பந்தில் போல்ட் ஆனார். முதல் டெஸ்டில் சச்சின் 19 ரன்களே எடுத்திருந்தார். எனவே இந்த டெஸ்ட்டில் அவர் அதிக ரன் குவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சச்சினின் ஆட்டம் ஏமாற்றம் அளிப்பதாகவே இருந்தது. சச்சின் ஆட்டமிழந்த போது இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

  சரிவில் இருந்த மீட்ட கோலி, ரெய்னா: பின்னர் ஜோடி சேர்ந்த கோலி, ரெய்னா ஆகியோர் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதுடன், ரன்களையும் சேர்த்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் உயரத் தொடங்கியது.

  ரெய்னா தப்பினார்: ரெய்னா 48 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜீதன் படேல் பந்து வீச்சில் கீப்பர் வான் விக் "ஸ்டம்ப்டு' செய்தார். எனினும் 3-வது நடுவரின் பரிசீலனையில் அது நோபால் என அறிவிக்கப்பட்டது. எனவே ரெய்னா தப்பினார்.

  பின்னர் அரைசதம் கடந்த ரெய்னா 55 ரன்களில் (90 பந்துகள்) ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் தோனியும் நிலைத்து நின்று விளையாடினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கோலி அரைசதம் கடந்தார்.

  2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 93 ரன்களுடனும், தோனி 46 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

  இப்போதைய நிலையில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்தைவிட 82 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்னும் 5 விக்கெட் கைவசம் உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 3-வது நாள் ஆட்டத்தில் கோலி, தோனி ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி ரன் குவித்தால் இந்தியா வலுவான ஸ்கோரை எட்ட முடியும்.

  அதே நேரத்தில் நியூஸிலாந்து வீரர்களும் விக்கெட்டை வீழ்த்த முயற்சிப்பார்கள். 3-வது நாள் ஆட்டத்தில் எந்த அணியின் கை ஓங்குகிறதோ, அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai