சுடச்சுட

  

  புது தில்லி, செப். 1: ஐபிஎல் கிரிக்கெட்டில் இடம் பெற்றுள்ள டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வாங்கிக் கொள்ள முன்வருபவர்களைத் தேடி வருகிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ).

  டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையாளரான டெக்கான் குழுமம், அந்த அணியை விற்பனை செய்துவிட கடந்த ஐபிஎல் போட்டியின்போது முடிவு செய்தது. இந்நிலையில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி குறித்த இறுதி முடிவை எடுக்கும் வகையில் ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் செப்டம்பர் 4-ல் நடைபெறவுள்ளது.

  டெக்கான் அணி கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. எனவே அடுத்த சீசனில் அந்த அணி பங்கேற்பது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது. எனினும் ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை யாரிடமாவது விற்பனை செய்ய முடியுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  2008-ம் ஆண்டில் ரூ.588 கோடிக்கு டெக்கான் சார்ஜர்ஸ் அணியை டெக்கான் குழுமம் வாங்கியது. 2-வது ஐபிஎல் போட்டியில் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால் கடந்த இரு ஐபிஎல் போட்டிகளில் அந்த அணியால் பெரிய அளவில் வெற்றிகளைப் பெற முடியவில்லை. இதனால் அணியின் மதிப்பும் சரிந்துவிட்டது. அணியின் நிதி நெருக்கடியும் அதிகரித்துள்ளது. எனவே அந்த அணியை வாங்க முதலீட்டாளர்கள் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai