சுடச்சுட

  

  நியூயார்க், செப். 1: யு.எஸ். ஓபன் டென்னிஸ் 4-வது சுற்று ஆட்டத்தில் விளையாட முதல்நிலை வீராங்கனை விக்டோரியா அசரென்கா, ரஷியாவின் மரியா ஷரபோவா, சமந்தா ஸ்டோசர், நாடியா பெட்ரோவா உள்ளிட்டோர் தகுதி பெற்றுள்ளனர்.

  முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான சீனாவின் லீ நா, 3-வது சுற்றில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

  பெலாரஸின் விக்டோரியா அசரென்கா 3-வது சுற்றில் சீனாவின் சியங் ஜீயை எதிர்கொண்டார். இதில் 6-0,6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக அசரென்கா வென்றார்.

  தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஷரபோவா, அமெரிக்காவின் மலோரி பர்டெட்டை 6-1,6-1 என்ற செட் கணக்கில் வென்றார். இதில் கடைசி 13 புள்ளிகளில் 12 புள்ளிகள் ஷரபோவா வசமானது. இந்த வெற்றி மூலம் ஷரபோவா 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

  லீ நாவுக்கு அதிர்ச்சி: தரவரிசையில் 89-வது இடத்தில் உள்ள பிரிட்டனின் லாரா ராப்சன், தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள லீ நாவை 3-வது சுற்றில் எதிர்கொண்டார்.

  இதில் 6-4, 6-7(5/7), 6-2 என்ற செட் கணக்கில் லாரா வென்று, லீ நாவுக்கு அதிர்ச்சி தோல்வியை அளித்தார்.

  நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர், பிரான்ஸின் மரியோன் பர்தோலி, செக். குடியரசின் பெட்ரா விட்டோவா, ரஷியாவின நாடியா பெட்ரோவா உள்ளிட்டோரும் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

  ஆடவர் பிரிவில் முன்னிலை வீரர் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஸ்பெயினின் டேவிட் பெரர், அமெரிக்க வீரர்கள் ஆன்டி ரோடிக், ஜான் இஸ்னர் ஆகியோர் 3-வது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

  3-வது சுற்றில் பயஸ் - ரடேக்: ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - செக். குடியரசின் ரடேக் ஸ்டெபானிக் ஜோடி 3-வது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

  2-வது சுற்றில் பிரேஸிலின் ஜோ செüசா, தாமஸ் பெலூசி இணையை 7-5,7-6(7-3) என்ற செட் கணக்கில் இவர்கள் வென்றனர்.

  பயஸ் - ரடேக் இணை இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றுள்ளது நினைவுகூரத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai