சுடச்சுட

  
  spt5

  நியூயார்க், செப். 2: யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செர்பியாவின் அனா இவானோவிக், போலந்தின் அக்னிஸ்கா ரத்வேன்ஸ்கா, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

  போட்டியின் 6-வது நாளான ஞாயிற்றுக்கிழமை மகளிர் பிரிவில் அனா இவானோவிக் அமெரிக்காவின் ஸ்லான் ஸ்டீபன்ûஸ எதிர்கொண்டார். இதில் 6-7 (4/7), 6-4, 6-2 என்ற நேர் செட்களில் அனா வென்றார். ரஷியாவின் காத்ரீனா மக்ரோனாவை செரீனா வில்லியம்ஸ் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

  போலந்தின் அக்னிஸ்கா ரத்வேன்ஸ்கா, செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிக்கை 6-3,7-5 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். இத்தாலியின் சாரா இரானி, ஜெர்மனியின் ஏஞ்சலி கெர்பர், இத்தாலியின் ராபெர்டா வின்ஸி ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

  ரோஜர் ஃபெடரர் வெற்றி: ஆடவர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் முதல் நிலை வீரர் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஸ்பெயினின் பெர்ணான்டோ வெர்டாசோவை எதிர் கொண்டார். இதில் 6-3,6-4,6-4 என்ற செட்களில் ஃபெடரர் வென்றார்.

  செக். குடியரசின் தாமஸ் பெர்டிச், ஸ்பெயின் வீரர் அல்மாங்ரோ, குரோஷியாவின் மரின் சிலிச், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, அமெரிக்காவின் மார்டி ஃபிஷ், கனடாவின் மிலோஸ் ரோனிக் ஆகியோரும் 3-வது சுற்றில் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

  3-வது சுற்றில் சானியா - பெத்தானியா: மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - அமெரிக்காவின் பெத்தானியா மடேக் ஜோடி 3-வது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

  இரட்டையர் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள சானியா ஜோடி, 2-வது சுற்றில் குரோஷியா - ஹங்கேரி ஜோடியான டாரிஜா - கதாலின் இணையை எதிர்கொண்டது. 1 மணி நேரம் 39 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 6-4,6-2 என்ற நேர் செட்களில் சானியா - பெத்தானியா ஜோடி வென்றது.

  பயஸ் - வெஸ்னினா வெற்றி: கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்றுள்ள இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ரஷியாவின் எலினா வெஸ்னினா இணை முதல் சுற்றில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai