சுடச்சுட

    
    spt2

    செப். 2: இந்தியா - நியூஸிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்தியாவை விட நியூஸிலாந்து 244 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்னும் ஒரு விக்கெட் அந்த அணியிடம் உள்ளது.

    முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கோலி 103 ரன்கள் எடுத்தார். டிம் செüதி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    அடுத்து 2-வது இன்னிங்ûஸ விளையாடிய நியூஸிலாந்து, 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    முன்னதாக 5 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை தனது முதல் இன்னிங்ûஸத் தொடர்ந்தது.

    கோலி 93 ரன்களுடனும், தோனி 46 ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

    ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே தோனியும் பவுண்டரி விளாசி அரைசதம் கடந்தார். அதே ஓவரில் கோலியும் பவுண்டரி அடித்து சதமடித்தார்.

    103 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோலி விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து தோனியுடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். ஸ்கோர் 312 ஆக இருந்தபோது தோனி 62 ரன்களில் வெளியேறினார்.

    இந்தியா ஆல் அவுட்: இதையடுத்து இந்திய அணியின் சரிவு தவிர்க்க முடியாததானது.

    அஸ்வின் ஒருமுனையில் நின்று விளையாடிய போதிலும், ஜாகீர் கான் 7, ஓஜா 0, உமேஷ் யாதவ் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்தியா 353 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஸ்வின் 32 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    நியூஸிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் டிம் செüதி 64 ரன்கள் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தினார். டெஸ்ட் ஆட்டத்தில் இதுவே அவரது சிறந்த பந்துவீச்சு.

    நியூஸிலாந்து வீழ்ச்சி: அடுத்து நியூஸிலாந்து தனது 2-வது இன்னிங்ûஸ தொடங்கியது. மெக்கல்லம், கப்டில் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர். உணவு இடைவேளைக்குப் பின் நியூஸிலாந்தின் வீழ்ச்சி தொடங்கியது.

    கப்டில் (7 ரன்கள்), மெக்கல்லம் (23 ரன்கள்) ஆகியோரை உமேஷ் யாதவ் வெளியேற்றினார். அதன் பின்னர் அஸ்வின், ஓஜா ஆகியோரது சுழற்பந்தில் சிக்கி நியூஸிலாந்து வீரர்கள் வெளியேறத் தொடங்கினர்.

    வில்லியம்சன் 13 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் சதமடித்த கேப்டன் ராஸ் டெய்லரால் 35 ரன்களே எடுத்த முடிந்தது. அவரை ஓஜா வெளியேற்றினார்.

    ஃபிளின், பிராங்க்ளின், வான் விக் ஆகியோர் ஓரளவுக்குத் தாக்குப் பிடித்து விளையாடினர். இதனால் நியூஸிலாந்து அணி 200 ரன்களைக் கடந்தது. பிளின் 31 ரன்களும், பிராங்க்ளின் 41 ரன்களும், வான் விக் 31 ரன்களும் எடுத்தனர். இவர்கள் அனைவருமே அஸ்வினால் வெளியேற்றப்பட்டனர்.

    3-வது நாள் ஆட்டம் முடிய சிறிது நேரமே இருந்த வேளையில் செüதி 2 ரன்களிலும், பிரேஸ்வெல் 22 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.

    3-வது நாள் ஆட்ட முடிவில் நியூஸிலாந்து 2-வது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது. ஜீதன் படேல் 10 ரன்னிலும், போல்ட் ரன் ஏதுமின்றும் களத்தில் உள்ளனர்.

    அஸ்வின் 69 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உமேஷ் யாதவ், பிரக்யான் ஓஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

    நியூஸிலாந்து 244 ரன்கள் முன்னிலை: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்தை விட 12 ரன்கள் குறைவாக எடுத்தது. எனவே இப்போதைய நிலையில் நியூஸிலாந்து அணி இந்தியாவை விட 244 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

    திங்கள்கிழமை நடைபெறும் 4-வது நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்தின் கடைசி விக்கெட்டையும் விரைவில் வீழ்த்தி, அடுத்து வெற்றி இலக்கை எட்ட வேண்டியது உள்ளது.

    4-வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டால் அன்றைய தினமே வெற்றி இந்திய அணியின் வசமாக வாய்ப்பு உள்ளது.

    மாறாக நியூஸிலாந்து பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினால், வெற்றி வாய்ப்பு நியூஸிலாந்துக்கு சாதகமாகும்.

    இந்தியாவுக்கு வெற்றி: கோலி நம்பிக்கை

    நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெறும் என்று விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    முதல் இன்னிங்ஸில் சதமடித்த அவர் கூறியது: இந்த டெஸ்ட் முடிய இன்னும் 2 நாள்கள் உள்ளன. நியூஸிலாந்தின் 2-வது இன்னிங்ஸ் ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது. எனவே நிதானமாக பேட்டிங் செய்தாலே நமது அணி வெற்றி பெற முடியும். இப்போதைய சூழ்நிலையில் இந்திய அணியே முன்னிலையில் உள்ளது.

    அதே நேரத்தில் நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களை சிறிது சமாளித்து விளையாட வேண்டும். இந்த ஆட்டத்தில் சதமடித்தது மிகவும் திருப்தி அளிக்கிறது என்றார் கோலி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai