சுடச்சுட

  

  பாரா ஒலிம்பிக்கில் வசதி குறைபாடு: இந்திய வீரர் குற்றச்சாட்டு

  Published on : 26th September 2012 11:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  லண்டன், செப். 2: பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்களுக்கு வசதி குறைபாடுகள் இருப்பதாக இந்திய வீரர் பாஷா குற்றம்சாட்டியுள்ளனர்.

  ஊனமுற்றோருக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் வீரர்களுக்கு பல்வேறு வசதி குறைபாடுகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  பளு தூக்குதலில் பங்கேற்றுள்ள பாஷா கூறியது: ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் இங்கு தங்கியிருக்கிறேன். எனது பயிற்சியாளர் என்னுடன் தங்கிக்கொள்ள இங்குள்ள அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. மேலும் தனிப்பட்ட உதவியாளர் என்று யாரும் நியமிக்கப்படவில்லை. அனைத்து வீரர்களுக்கும் சேர்த்து ஒரு உதவியாளர்தான் இருக்கிறார்.

  இதனால் அரை கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று சாப்பிடுவதில் பிரச்னை உள்ளது. சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் நான் வேகமாக வேறு இடங்களுக்குச் செல்வதில் மிகுந்த பிரச்னை ஏற்படுகிறது. இதுபோன்ற விஷயங்களால் வீரர்களின் தன்னம்பிக்கை குறைந்து ஆட்டத்திறன் பாதிக்கப்படுகிறது என்றார் அவர்.

  இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு இங்கிலாந்தில் உள்ள தூதரக அதிகாரிகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மாக்கன் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai