சுடச்சுட

  
  spt3

  பெங்களூர், செப். 2: சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை அணியில் மீண்டும் சேர்க்க வேண்டுமென்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கருத்துத் தெரிவித்துள்ளார்.

  சுமார் ஓராண்டுக்கு மேலாக ஹர்பஜன் சிங்குக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அஸ்வின், ஓஜா ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

  முழு உடல் தகுதியுடன் விளையாடத் தயாராக இருப்பதாக ஹர்பஜன் சிங் அறிவித்தார். எனினும் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை. அதே நேரத்தில் 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் அவர் இடம் பெற்றுள்ளார். எனினும் அவர் களமிறக்கப்படுவாரா என்பதிலும், டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவாரா என்பதிலும் சந்தேகம் நீடிக்கிறது.

  இந்நிலையில் இது தொடர்பாக கும்ப்ளே கூறியது: இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் இந்தியாவுக்கு வருகின்றன. அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங்கால் அந்த அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீச முடியும் என்றார்.

  பெங்களூரில் நடைபெற்று வரும் இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் கும்ப்ளே வர்ணனை செய்தார். அப்போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai