சுடச்சுட

  
  spt4

  புது தில்லி, செப். 2: நேரு கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் இந்திய அணி கேமரூனை "பெனால்டி ஷூட்அவுட்' முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் வென்று பட்டத்தை கைப்பற்றியது.

  இதன் மூலம் தொடர்ந்து 3-வது முறையாக பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. தில்லியில் ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் கெüரமான்ஜி சிங் 19 நிமிடத்திலும், கேப்டன் சுனில் சேத்ரி 29-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

  கேமரூனின் மாக்குன் 29-வது நிமிடத்திலும், மபோன்டோ 54 நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

  இதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன. கூடுதல் நேரத்திலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட்அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

  இதில் இந்திய வீரர்கள் தங்களுக்கான 5 வாய்ப்புகளையும் கோல் ஆக்கினர். கேமரூன் வீரர்கள் தங்களுக்கான 5 வாய்ப்புகளில் கடைசி வாய்ப்பை கோட்டைவிட்டதால் தோல்வியடைந்தனர்.

  கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 168-வது இடத்திலும், கேமரூன் 59-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  இதற்கு முன்பு 2007, 2009-ம் ஆண்டுகளில் இந்திய அணி நேரு கோப்பையை வென்றிருந்தது. இப்போது தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் ஆகியுள்ளது.

  இப்போட்டியில் இந்தியா, கேமரூன், நேபாளம், சிரியா, மாலத்தீவுகள் ஆகிய 5 நாடுகள் பங்கேற்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai