சுடச்சுட

  
  spt2

  இந்த டெஸ்ட் தொடர், சச்சின் டெண்டுல்கருக்கு சிறப்பானதாக அமையவில்லை. 3 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 63 ரன்களே அவர் எடுத்துள்ளார். அதிலும் 3 முறையும் அவர் "போல்ட்' ஆகி வெளியேறினார். இரு முறை "மிடில் ஸ்டெம்ப்' பறிகொடுத்தார்.

   வழக்கமாக சச்சின் அவுட் ஆகும்போது ஏமாற்றத்தை வெளிப்படுத்துவாறே தவிர கோபத்தை வெளிக்காட்டுவது இல்லை. ஆனால் 2-வது இன்னிங்ஸில் 27 ரன்களில் போல்ட் ஆனபோது சச்சின் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்.

   டெஸ்ட் போட்டியில் இதுவரை 51 முறை அவர் போல்ட் ஆகியுள்ளார். இந்த போல்ட் பட்டியலில் ராகுல் திராவிட் (55 முறை) முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் (53 முறை) 2-வது இடத்தில் உள்ளார். சச்சின் மூன்றாவதாக உள்ளார்.

   இதுவரை 190 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள சச்சின், 15,533 ரன்களை எடுத்துள்ளார். அவரது சராசரி 55.08.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai