சுடச்சுட

  

  லண்டன், செப். 3: இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் பீட்டர்சனை மீண்டும் சேர்க்க வேண்டுமென்று அந்த அணி பேட்ஸ்மேன்கள் மோர்கன், ரவி போபாரா ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

  இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ஆன்டி பிளவர், டெஸ்ட் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் ஆகியோரை ஏளனம் செய்து தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு பீட்டர்சன் எஸ்எம்எஸ் அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் தனது செயலுக்காக அணி நிர்வாகத்திடம் பீட்டர்சன் மன்னிப்புக் கேட்டார். இருந்தபோதிலும் அவர் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இதனிடையே கேப்டன் ஸ்டிராஸýம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

  இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மோர்கன், ரவி போபாரா ஆகியோர், "இங்கிலாந்து அணிக்காக பீட்டர்சன் மீண்டும் விளையாட வேண்டுமென்றுதான் அனைவரும் விரும்புவார்கள்.

  அவர் சிறந்த வீரர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே அவர் மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது' என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai