சுடச்சுட

    
    spt4

    நியூயார்க், செப். 3: யு.எஸ். ஓபன் டென்னிஸ் காலிறுதிச் சுற்றுக்கு ரஷியாவின் மரியா ஷரபோவா, பெலாரஸின் விக்டோரியா அசரென்கா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

    ஆடவர் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய இரு பிரிவுகளிலும் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    மகளிர் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள விக்டோரியா அசெரன்கா, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜார்ஜியாவின் அனா டாடிஸ்விலியை எதிர்கொண்டார்.

    இதில் 6-2,6-2 என்ற நேர் செட்களில் அசரென்கா எளிதாக வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    யு.எஸ். ஓபன் டென்னிஸில் அவர் இப்போதுதான் முதல்முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். காலிறுதியில் நடப்பு சாம்பியன் சமந்தா ஸ்டோசரை அவர் எதிர்கொள்ள இருக்கிறார்.

    மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ரஷியாவின் மரியா ஷரபோவா, சக நாட்டு வீராங்கனையான நாடியா பெட்ரோவாவை எதிர்கொண்டார்.

    இதில் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் ஷரபோவா வென்றார். 2-வது செட்டில் சுதாரித்து விளையாடிய பெட்ரோவா 6-4 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். எனினும் அடுத்த செட்டில் 6-4 என்ற கணக்கில் ஷரபோவா வென்று ஆட்டத்தை தனதாக்கினார். இதன் மூலம் அவர் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.பிரான்ஸ் வீராங்கனை மரியோன் பர்தோலி, செக். குடியரசின் பெட்ரா விட்டோவாவை 1-6,6-2,6-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    ஆடவர் பிரிவு: ஆடவர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் வரையே முடிந்துள்ளது. இதில் ஸ்பெயின் டேவிட் பெரர், செர்பியாவின் நோவாக் ஜோகோவிக், அமெரிக்காவின் ஆன்டி ரோடிக், ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, செர்பியாவின் ஜான்கோ டிப்செரவிக் உள்ளிட்டோர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

    பயஸ் ஜோடியின் வெற்றி தொடர்கிறது: இந்திய வீரர் பயஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானிக் உடனும், கலப்பு இரட்டையர் பிரிவில் ரஷியாவின் எலினா வெஸ்னினாவுடனும் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். இந்த இரு பிரிவிலுமே பயஸ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai