சுடச்சுட

  
  spt4

  புது தில்லி, செப்.4: 19 வயதுக்குள்பட்டோர் (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த தில்லி வீரர் உன்முக்த் சந்துக்கு (படம்) ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது.

  இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் முதல்வர் ஷீலா தீட்சித் வெளியிட்டார். யு-19 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் சதமடித்து இந்தியாவுக்கு வெற்றித் தேடித்தந்த உன்முக்துக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் தீர்மானம் தில்லி சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது.

  அப்போது இந்திய அணி வீரர்கள் மற்றும் தில்லி வீரர்களின் சிறப்பான செயல்பாட்டை பாராட்டி பேரவை உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.

  ஷீலா தீட்சித் கூறுகையில், "சச்சின் டெண்டுல்கரைப் போல உன்முக்தும் எதிர்காலத்தில் நாட்டின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக வருவார்' என நம்புவதாகத் தெரிவித்தார். இதேபோல் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கும் சட்டப் பேரவையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

  மேலும் முதல்வரை சந்திக்க வருமாறு உன்முக்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் முதல்வரை உடனடியாக சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai