சுடச்சுட

  
  spt2

  லண்டன், செப்.4: லண்டனில் நடைபெற்று வரும் பாரா (ஊனமுற்றோர்) ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் கிரிஷா ஹோசனகாரா நாகராஜீ கெüடா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

  ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் (எஃப் 42 பிரிவு) 1.74 மீ. உயரம் தாண்டி அவர் வெள்ளியை வென்றார். இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள முதல் பதக்கம் இது. கர்நாடகத்தைச் சேர்ந்த 24 வயது வீரரான கெüடா "சிஸர்ஸ் டெக்னிக்கை' பயன்படுத்தி வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதே பிரிவில் ஃபிஜியின் இலியேசா டேலானா தங்கமும், போலந்தின் லூகாஸ் வெண்கலமும் வென்றனர்.

  கடந்த 2008-ம் ஆண்டு முதல் பெங்களூரில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான "சமர்த்தனம்' உதவியுடன் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறார் கெüடா. இவர் இடது கால் பாதிப்புக்குள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai