சுடச்சுட

  
  spt6

  சென்னை, செப்.5: சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் என்ற பெயரில் பள்ளிகளுக்கு இடையிலான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை தொடங்கியது.

  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளியின் "ஏ' மைதானத்தில் தொடங்கிய இப் போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தொடங்கி வைத்தார். வரும் 29-ம் தேதி வரை இப் போட்டி நடைபெறுகிறது.

  சென்னையில் உள்ள 32 பள்ளிகள் இப் போட்டியில் பங்கேற்றுள்ளன. மொத்தம் 31 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. காலிறுதி ஆட்டங்கள் செயின்ட் பீட்ஸ் பள்ளியின் "ஏ' மற்றும் "பி' மைதானங்களில் நடைபெறுகின்றன. அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டம் குருநானக் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்றன.

  முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு சுழற்கேடயம் வழங்கப்படவுள்ளன.

  முதல்நாள் முடிவுகள்: முதல்நாளான புதன்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் செயின்ட் பீட்ஸ், மஹரிஷி வித்யா மந்திர், டி.ஏ.வி., செயின்ட் பாட்ரிக்ஸ் ஆகிய பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai