சுடச்சுட

  
  spt5

  திருநெல்வேலி, செப். 5: பாளையங்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டி புதன்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் செயின்ட் மேரீஸ் அணி வெற்றி பெற்றது.

  பாளையங்கோட்டை ஹாக்கி நலச் சங்கத்தின் சார்பில் பெல்பின்ஸ் கோப்பைக்கான 15-வது மாநில அளவிலான ஹாக்கி போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.

  போட்டிகளை மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) என். மணிவண்ணன் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பெல்பின்ஸ் நிறுவன இயக்குநர் சஞ்சய் குணசிங், மாவட்ட விளையாட்டு அலுவலர் க. சேவியர் ஜோதி சற்குணம், பாளையங்கோட்டை ஹாக்கி நலச் சங்கத்தின் தலைவர் மேஜர் பெனடிக்ட், செயலர் ரமேஷ், மாவட்ட ஹாக்கி பயிற்சியாளர் ரோஸ்மேரி பாத்திமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளி அணியும், மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. இதில் செயின்ட் மேரீஸ் அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

  இப்போட்டி வரும் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதிலும் இருந்து 12 அணிகள் கலந்து கொண்டுள்ளன. வியாழக்கிழமை காலை 3 ஆட்டங்களும், மாலையில் 2 ஆட்டங்களும் நடைபெறுகின்றன.

  வரும் 8-ம் தேதி மாலை இறுதி ஆட்டம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

  இதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் ஸ்ரீநிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு மற்றும், கோப்பையை வழங்குகிறார்.

  போட்டிக்கான ஏற்பாடுகளை பெல்பின்ஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் பாளையங்கோட்டை ஹாக்கி நலச் சங்க நிர்வாகிகள் செய்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai