சுடச்சுட

  

  சென்னை, செப்.5: 10-வது ஜூனியர் மாநில எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவில் கரூர் அணியும், மகளிர் பிரிவில் சென்னை அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.

  காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் நடைபெற்ற இப் போட்டியில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் 26 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

  ஆடவர் பிரிவு இறுதிச் சுற்றில் கரூர் அணி, திருச்சி அணியை வீழ்த்தியது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் காஞ்சிபுரம் அணியை வீழ்த்தி 3-வது இடத்தைப் பிடித்தது நாமக்கல்.

  மகளிர் பிரிவு இறுதிச்சுற்றில் கரூர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது சென்னை. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் திருச்சி அணியை வீழ்த்தியது காஞ்சிபுரம் அணி. முகிலரசன், நிவேதா ஆகியோர் சிறந்த வீரர், வீராங்கனைகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

  தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையை வழங்கினார். சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் தலைவர் ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  முன்னதாக காஞ்சிபுரம் மாவட்ட எறிபந்து சங்க செயலர் ரெக்ஸ் ஆப்ரஹாம் வரவேற்றார். தமிழ்நாடு எறிபந்து சங்க பொதுச் செயலர் பால விநாயகம் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai