சுடச்சுட

  

  முருகப்பா கோப்பை ஹாக்கிப் போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்

  Published on : 26th September 2012 11:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னை, செப்.5: 87-வது எம்.சி.சி.-முருகப்பா தங்கக் கோப்பை அகில இந்திய ஹாக்கிப் போட்டி சென்னையில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

  சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெறும் இப் போட்டி வரும் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.

  நடப்புச் சாம்பியன் ஓ.என்.ஜி.சி., பஞ்சாப் நேஷனல் வங்கி, பி.பி.சி.எல்., ராணுவ லெவன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐ.ஓ.சி., இந்திய ரயில்வே, ஏர் இந்தியா, அகில இந்திய சுங்க மற்றும் உற்பத்தி வரித்துறை, ஐ.சி.எஃப். ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

  பிரிவுக்கு 5 அணிகள் வீதம் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. லீக் மற்றும் நாக்-அவுட் முறைகளில் போட்டி நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி ஆட்டங்கள் வரும் 15-ம் தேதியும், இறுதி ஆட்டம் 16-ம் தேதியும் நடைபெறுகின்றன.

  முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ. 2.5 லட்சமும், 2-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.1.5 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும். அரையிறுதி ஆட்டம் முதல் ஆட்டநாயகன் விருது வழங்கப்படும்.

  இது தவிர போட்டியின் சிறந்த வீரர், சிறந்த முன்கள வீரர், சிறந்த கோல் கீப்பர் உள்ளிட்டோருக்கும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai