சுடச்சுட

  
  spt4

  லண்டன், செப்.5: பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் கிரிஷா ஹொசநகரா நாகராஜீ கெüடாவுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

  அதேநேரத்தில் மாற்றுத்திறனாளியான கிரிஷாவுக்கு வேறு யாரும் பரிசு வழங்க முன்வராதது ஏமாற்றமளிப்பதாக பாரா ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கும், பாரா ஒலிம்பிக் போட்டிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இரண்டும் ஒரே மாதிரியானவைதான் என்றும் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

  "கிரிஷாவுக்கு ரொக்கப் பரிசு வழங்க பெரு நிறுவனங்கள் முன்வர வேண்டும்' என்று இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி தலைவர் சுல்தான் அஹமது தெரிவித்துள்ளார்.

  இடது கால் பாதிப்புக்குள்ளானவரான கிரிஷா, லண்டனில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் 1.74 மீ. தூரம் தாண்டி வெள்ளி வென்று சாதனை படைத்தார். பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 10 பேர் கலந்து கொண்டுள்ளனர். போட்டி நிறைவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இதுவரை இந்தியா ஒரு பதக்கம் மட்டுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai