சுடச்சுட

  

  இந்தியாவில் ஹாக்கியை எச்.ஐ. நிர்வகிக்க வேண்டும்: இந்திய ஒலிம்பிக் சங்கம்

  Published on : 26th September 2012 11:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புது தில்லி, செப்.6: இந்தியாவில் ஹாக்கி விளையாட்டை "ஹாக்கி இந்தியா' (எச்.ஐ) அமைப்பே நிர்வகிக்க வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்க (ஐஓஏ) சிறப்புக் குழு கூறியுள்ளது.

  ஹாக்கி இந்தியாவே சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்.ஐ.எச்.) விதிகளை முறையாக பின்பற்றுவதாகவும், அதனால் அந்த அமைப்பே ஹாக்கியை நிர்வகிக்க வேண்டும் என்று ஒருமனதாக முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

  இந்தியாவில் ஹாக்கி விளையாட்டை நிர்வகிப்பதில் ஹாக்கி இந்தியா, இந்திய ஹாக்கி கூட்டமைப்பு ஆகிய இரு அமைப்புகளுக்கிடையே நீண்ட நாள்களாக மோதல் இருந்து வந்தது. இதையடுத்து இந்தப் பிரச்னையை தீர்க்குமாறு ஐஓஏவுக்கு உத்தரவிட்டது எஃப்.ஐ.எச்.

  இதையடுத்து இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜி.எஸ்.மந்தேர், இந்திய பளு தூக்குதல் சம்மேளனத்தின் தலைவர் பிரேந்திர பிரசாத், இந்திய ஹேண்ட்பால் சம்மேளன பொதுச் செயலர் எஸ்.எம்.பாலி ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழு தங்களது அறிக்கையை ஐஓஏவிடம் புதன்கிழமை அளித்தது.

  ஐஓஏ சிறப்புக் குழுவின் முடிவு பாரபட்சமாக இருப்பதாக இந்திய ஹாக்கி கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai