சுடச்சுட

  
  spt3

  புது தில்லி, செப்.6: வாய்ப்பு கொடுத்தால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியளிக்கத் தயார் என்று முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பது:

  இந்திய அணிக்கு பயிற்சியளிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை காலம்தான் தீர்மானிக்கும். பயிற்சியாளர் பதவிக்கு நான் சரியான நபர் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கருதினால், பயிற்சியளிக்கத் தயாராக இருக்கிறேன்.

  வீரர்களின் திறமை, பார்ம், முன்னேற்றம் ஆகியவற்றில் என்னால் மாற்றம் ஏற்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். எனக்கு எல்லாம் வழங்கிய கிரிக்கெட்டுக்கு நான் ஏதாவது திருப்பி செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஒரேவழி பயிற்சியாளர் பணிதான்.

  ஓர் அணிக்கு கேப்டன்தான் மிக முக்கியமான நபர் என்று எப்போதுமே கூறி வருகிறேன். அவர்தான் களத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கிறார். நான் 6 ஆண்டுகள் இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலத்தில் பல சமயங்களில் அணியின் கூட்டத்தில் சில முடிவுகளை எடுத்தாலும், சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு களத்தில் அந்த முடிவுகளை மாற்றியிருக்கிறேன். பயிற்சியாளர் என்பவர் கேப்டனுக்கு ஓரளவு உதவ மட்டுமே முடியும்.

  போட்டி தொடங்கிவிட்டால் பயிற்சியாளர் தனது இருக்கைக்கு சென்றுவிட வேண்டும். நானாக இருந்தாலும் சரி, திராவிட்டோ அல்லது சச்சினோ, டங்கன் பிளெட்சரோ யார் பயிற்சியாளராக இருந்தாலும் சரி தங்களின் ஆளுமைத் திறமையால் கேப்டனுக்கு உதவ வேண்டும். போட்டி தொடங்கிய பிறகு வீரர்களுக்கு அறிவுரை கூறக்கூடாது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai