சுடச்சுட

  
  spt5

  துபை, செப்.6: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

  முன்னதாக 6-வது இடத்தில் இருந்த அவர் இப்போது 2 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய பெüலர்களில் முதல் இருபது இடங்களுக்குள் உள்ள ஒரே வீரர் அஸ்வின் மட்டுமே.

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் பாகிஸ்தானின் அஜ்மல் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பாகிஸ்தானின் முகமது ஹபீஸ் 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் சோட்சோபி 3-வது இடத்திலும் உள்ளனர்.

  பேட்ஸ்மேன் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் ஆம்லா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் விராட் கோலி தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 3-வது இடத்தில் உள்ளார். இந்திய கேப்டன் தோனி ஓர் இடத்தை இழந்து இப்போது 6-வது இடத்தில் உள்ளார். கம்பீர் 9-வது இடத்தில் உள்ளார். முதல் இருபது இடங்களுக்குள் இந்திய வீரர்கள் வேறு யாரும் இல்லை.

  அணி தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் முறையே முதல் 2 இடங்களில் உள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai