சுடச்சுட

  
  spt7

  சென்னை, செப்.6: சென்னை மாவட்ட "பி' டிவிசன் லீக் வாலிபால் போட்டி சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது.

  இப் போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.

  இப் போட்டி 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியின் முதல்நாளான வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் சென்னை மாநகர காவல் துறை அணி 26-24, 26-24 என்ற செட் கணக்கில் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக அணியை வீழ்த்தியது.

  சங்கரா பல்கலைக்கழக அணி 25-17, 25-15 என்ற செட் கணக்கில் பி.எஸ்.என்.எல். அணியை வீழ்த்தியது. தெற்கு ரயில்வே அணி 25-19, 25-13 என்ற செட் கணக்கில் கே.சி.டெக் கல்லூரி அணியையும், வருமான வரித் துறை அணி 25-10, 25-9 என்ற செட் கணக்கில் அகர்சன் கல்லூரி அணியையும் வீழ்த்தின.

  முன்னதாக தொடக்க விழாவின்போது "சி' டிவிசன் லீக் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற சங்கரா பல்கலைக்கழக அணிக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் ராஜ்குமார் கோப்பையை வழங்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai