சுடச்சுட

  

  சென்னை, செப்.6: முருகப்பா கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஏர் இந்தியா 4-0 என்ற கணக்கில் இந்திய ரயில்வே அணியை வீழ்த்தியது.

  87-வது எம்.சி.சி.-முருகப்பா தங்கக் கோப்பை அகில இந்திய ஹாக்கிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

  10 அணிகள் இப் போட்டியில் பங்கேற்றுள்ளன. முதல் ஆட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி-பிபிசிஎல் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோலடிக்க ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

  இரண்டாவது ஆட்டத்தில் இந்திய ரயில்வே அணியும், ஏர் இந்தியா அணியும் மோதின. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஏர் இந்தியா அணி ஆதிக்கம் செலுத்தியது.

  இதனால் 3, 55, 59, 63-வது நிமிடங்களில் ஏர் இந்தியா அணிக்கு கோல் கிடைத்தது. அதேநேரத்தில் இந்திய ரயில்வே அணியால் கடைசி வரை கோலடிக்க முடியவில்லை. இதனால் ஏர் இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றி கண்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai