சுடச்சுட

  
  spt4

  நியூயார்க், செப்.7: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக் ஜோடி முன்னேறியுள்ளது.

  ஆடவர் இரட்டையர் அரையிறுதியில் பயஸ்-ரடேக் ஜோடி, ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ்-மார்க் லோபஸ் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டில் இரு ஜோடிகளும் 5-5 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தபோது, லோபஸýக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சை பெற்ற அவர் மீண்டும் களமிறங்கினார்.

  மேலும் 2 கேம்கள் நடைபெற்ற நிலையில் இரு ஜோடியும் 6-6 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தபோது, லோபஸ் தன்னால் விளையாட முடியாது என்று அறிவித்தார். இதையடுத்து ஸ்பெயின் ஜோடி போட்டியிலிருந்து விலகியது. இதனால் பயஸ் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

  பயஸ் ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் பாப் பிரையன்-மைக் பிரையன் சகோதரர்கள் ஜோடியை சந்திக்கிறது. இந்த ஜோடி தங்களின் அரையிறுதியில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் பாகிஸ்தானின் குரேஷி-நெதர்லாந்தின் ஜூலியன் ரோஜர் ஜோடியை வீழ்த்தியது.

  இறுதிச்சுற்றில் வெல்லும் பட்சத்தில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் பயஸ் வெல்லும் 3-வது பட்டமாக இது அமையும். முன்னதாக 2006, 2009 ஆகிய ஆண்டுகளில் ஆடவர் இரட்டையர் பிரிவிலும், 2008-ல் கலப்பு இரட்டையர் பிரிவிலும் அமெரிக்க ஓபனில் பயஸ் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  ஃபெரர்-ஜோகோவிச் மோதல்: ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் 6-3, 6-7, 2-6, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் செர்பியாவின் ஜான்கோ டிப்சேரவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

  சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் நடப்புச் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை சந்திக்கிறார் ஃபெரர். ஜோகோவிச்சும், ஃபெரரும் இதுவரை 13 முறை மோதியுள்ளனர். இதில் ஜோகோவிச் 8 முறையும், ஃபெரர் 5 முறையும் வெற்றி கண்டுள்ளனர்.

  ஜோகோவிச் தனது காலிறுதி ஆட்டத்தில் 6-7, 7-6 (3), 6-4 என்ற நேர் செட்களில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டினை தோற்கடித்தார். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச் ஆகியோர் மோதுகின்றனர்.

  நடால், ஃபெடரர் இல்லாத அரையிறுதி: 2004-ல் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் போட்டியில் 4-வது சுற்றோடு வெளியேறினார் ஸ்பெயினின் ரஃபேல் நடால். அதன்பிறகு நடைபெற்ற 33 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ரோஜர் ஃபெடரர், நடால் ஆகியோரில் ஒருவர் அரையிறுதிக்கு முன்னேறிவிடுவர். ஆனால் இந்த முறை அரையிறுதியில் இவர்கள் இருவரும் இல்லை. நடால் காயம் காரணமாக விலகினார். ஃபெடரர் காலிறுதியில் தோல்வி கண்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai