சுடச்சுட

  
  spt2

  விசாகப்பட்டினம், செப்.8: இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இருபது ஓவர் ஆட்டம் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

  இந்த ஆட்டம் ஆந்திரத்தின் கடற்கரை நகரமான விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மதியத்திலிருந்தே அங்கு கனமழை பெய்யத் தொடங்கியது. இரவு வரை தொடர்ந்து மழை பெய்ததையடுத்து ஒரு பந்துகூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.

  புற்றுநோயிலிருந்து குணமடைந்து அணிக்குத் திரும்பியிருக்கும் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங்கின் ஆட்டத்தைக் காணும் ஆர்வத்தில் ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். இதனால் 27 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மைதானம் நிரம்பியது. கடும் மழை பெய்தபோதும், அதை பொருட்படுத்தாது ரசிகர்கள் மைதானத்தில் காத்திருந்தனர். ஆனால் மழை வலுத்ததையடுத்து ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பினர்.

  இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி இருபது ஓவர் ஆட்டம் சென்னையில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai