சுடச்சுட

  

  ஜெய்ப்பூர், செப்.8: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் வரும் 21 முதல் 25-ம் தேதி வரை நடைபெறவிருந்த இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளது.

  போட்டியை நடத்துவதற்கு ஏதுவாக மைதானம் இல்லாததால் அங்கிருந்து போட்டி மாற்றப்படுகிறது. இந்தப் போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விரைவில் முடிவு செய்யும். ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மைதானத்தில் போட்டி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், பிசிசிஐ ஆடுகளம் மற்றும் மைதான கமிட்டி தலைவர் வெங்கட சுந்தரம் மைதானத்தை ஆய்வு செய்தார். இதன்பிறகு போட்டியை நடத்த முடியாது என்று அறிவித்தார்.

  இது தொடர்பாக சுந்தரம் மேலும் கூறியது: ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதோடு, மைதானமும் மோசமாக உள்ளது. வரும் நாள்களில் இங்கு மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. மழையால் போட்டி தடைபடுவதை விரும்பவில்லை. அதனால் போட்டியை இங்கிருந்து மாற்றும்படி பிசிசிஐக்கு பரிந்துரைத்து விட்டேன் என்றார்.

  ஐபிஎல் போட்டியின்போது மிகச்சிறந்த மைதானமாக தேர்வு செய்யப்பட்ட இந்த மைதானம், இப்போது பாழாகியுள்ளது. ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம், ராஜஸ்தான் மாநில விளையாட்டு கவுன்சில் ஆகியவை இடையிலான மோதலே மைதானம் மோசமானதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai