சுடச்சுட

  

  சென்னை, செப்.8: தமிழ்நாடு தட கள சங்கம் சார்பில் 52-வது தேசிய தட கள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் திங்கள்கிழமை தொடங்குகிறது. இப் போட்டி 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.

  சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறும் இப் போட்டியை மாலை 4 மணிக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தொடங்கி வைக்கிறார்.

  இந்தியாவின் சார்பில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தட கள வீரர், வீராங்கனைகள் 14 பேர் உள்பட சுமார் 1,000 பேர் இப் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

  மேற்கண்ட தகவல் தமிழ்நாடு தட கள சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai