சுடச்சுட

  
  spt3

  நியூயார்க், செப்.8: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பாப் பிரையன்-மைக் பிரையன் சகோதரர்கள் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

  வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிச்சுற்றில் பிரையன் சகோதரர்கள் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக் ஜோடியை வீழ்த்தியது.

  இதன்மூலம் கிராண்ட் ஸ்லாம் ஆடவர் இரட்டையர் போட்டிகளில் அதிக சாம்பியன் பட்டங்கள் (12 பட்டங்கள்) வென்ற ஆஸ்திரேலியாவின் ஜான் நியூகம்பே-டோனி ரோச்சி ஜோடியின் சாதனையை சமன் செய்துள்ளனர் பிரையன் சகோதரர்கள்.

  இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் இறுதிச்சுற்றில் பயஸ்-ரேடக் ஜோடியிடம் தோல்வி கண்ட பிரையன் சகோதரர்கள், அமெரிக்க ஓபனில் வென்றதன் மூலம் ஆறுதல் தேடிக்கொண்டனர். பிரையன் சகோதரர்கள் அமெரிக்க ஓபனில் வென்ற 4-வது பட்டம் இது. ஆஸ்திரேலிய ஓபனில் 5 முறையும், பிரெஞ்சு ஓபனில் ஒரு முறையும், விம்பிள்டனில் இரு முறையும் பட்டம் வென்றுள்ளனர். கிராண்ட் ஸ்லாம் உள்ளிட்ட அனைத்து போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 81 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளனர் இந்த சகோதரர்கள்.

  இறுதிச்சுற்றில் அசரென்கா-செரீனா: மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் பெலாரஸின் விக்டோரியா அசரென்கா-அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் மோதுகின்றனர்.

  முன்னதாக அசரென்கா தனது அரையிறுதியில் 3-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் மரியா ஷரபோவாவை வீழ்த்தினார். செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் இத்தாலியின் சாரா எர்ரானியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai