சுடச்சுட

  
  spt6

  பெருந்துறை, செப். 8: பெருந்துறையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சென்னை அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

  ஈரோடு மாவட்டம், பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சனிக்கிழமை நடைபெற்ற பல்வேறு போட்டிகளின் லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்ற அணிகள் விவரம்:

  கூடைப்பந்து: ஆடவர் பிரிவு கூடைப்பந்து போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், சென்னை சத்தியபாமா, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி, சென்னை ஹிந்துஸ்தான் பல்கலை., சென்னை லயோலா கல்லூரி அணி ஆகியவை வெற்றி பெற்றன.

  வாலிபால் போட்டி: ஆடவர் வாலிபால் போட்டியில் கோவை சி.ஐ.டி. கல்லூரி, கொங்கு பொறியியல் கல்லூரி, கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி அணிகளும், மகளிர் வாலிபால் போட்டியில் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, கோபி பி.கே.ஆர். கல்லூரி அணிகளும் வெற்றி கண்டன.

  டேபிள் டென்னிஸ் போட்டி: ஆடவர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி, கொங்கு பொறியியல் கல்லூரி, சென்னை எஸ்.எஸ்.என். கல்லூரி அணிகளுக்கு வெற்றி கிடைத்தது.

  கபடி போட்டி: ஆடவர் கபடிப் போட்டியில் சென்னை டி.பி.ஜெயின் கல்லூரி, சென்னை புனித ஜோசப் கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன.

  இறகுப் பந்து: ஆடவர் பிரிவு இறகுப்பந்து போட்டியில் கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, சென்னை எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி, சென்னை பனிமலர் பொறியியல் கல்லூரி, சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலை., திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி அணிகளும், மகளிர் பிரிவு இறகுப்பந்து போட்டியில் சென்னை பனிமலர் பொறியியல் கல்லூரி அணியும் வெற்றிபெற்றன. இறுதிப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெறுகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai