சுடச்சுட

  
  spt5

  திருநெல்வேலி, செப். 8: பாளையங்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் திருநெல்வேலி கிறிஸ்துராஜா பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

  பாளையங்கோட்டை ஹாக்கி நலச் சங்கத்தின் சார்பில் பெல்பின்ஸ் கோப்பைக்கான 15-வது மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 5-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இப் போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 12 அணிகள் பங்கேற்று விளையாடின.

  போட்டியின் நிறைவு நாளான சனிக்கிழமை மாலையில் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை கிறிஸ்து ராஜா மேல்நிலைப் பள்ளி அணியும், திருச்சி காஜா மியான் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே கிறிஸ்துராஜா அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். பின்னர் சுதாரித்துக் கொண்ட காஜா மியான் அணி வீரர்கள் சவால் அளிக்கும் வகையில் விளையாடினர். ஆனாலும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இறுதியில் கிறிஸ்துராஜா பள்ளி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

  பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் ஸ்ரீநிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார். விழாவில் பெல்பின்ஸ் இயக்குநர் சஞ்சய், பாளையங்கோட்டை ஹாக்கி நலச் சங்க தலைவர் மேஜர் பெனடிக்ட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai