சுடச்சுட

  

  முருகப்பா கோப்பை ஹாக்கி: ஆமிர் ஹாட்ரிக்கில் பிபிசிஎல் வெற்றி

  Published on : 26th September 2012 11:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னை, செப்.8: சென்னையில் நடைபெற்று வரும் முருகப்பா கோப்பை ஹாக்கிப் போட்டியின் லீக் ஆட்டத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசிஎல்) அணி 4-0 என்ற கணக்கில் ஐஓபி அணியை வீழ்த்தியது.

  பிசிசிஎல் வீரர் ஆமிர் கான் ஹாட்ரிக் கோலடித்து அந்த அணிக்கு வெற்றி தேடித்தந்தார். அவர் ஆட்டத்தின் 14, 28, 36-வது நிமிடங்களில் கோலடித்தார்.

  முருகப்பா கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

  சனிக்கிழமை நடைபெற்ற மற்ற லீக் ஆட்டங்களில் ஏர் இந்தியா அணி 7-1 என்ற கணக்கில் ஐசிஎஃப் அணியையும், இந்திய ரயில்வே அணி 1-0 என்ற கணக்கில் அகில இந்திய சுங்க மற்றும் உற்பத்தி வரித் துறை அணியையும் வீழ்த்தின.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai