சுடச்சுட

  
  spt5

  நியூயார்க், செப்.9: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டம் கனமழை மற்றும் கடுமையான காற்றின் காரணமாக திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டம் ஆகியவை சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது.

  ஆனால் சனிக்கிழமை காலையில் மழை பெய்ததால் பிரிட்டனின் ஆன்டி முர்ரே-செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச் ஆகியோரிடையிலான முதல் அரையிறுதி ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. இந்த ஆட்டத்தின்போது மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் காற்று வீசினாலும், முர்ரே 5-7, 6-2, 6-1, 7-6 (7) என்ற செட் கணக்கில் பெர்டிச்சை வீழ்த்தி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

  இதையடுத்து நடப்புச் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் இடையிலான 2-வது பாதி ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தின்போது காற்றின் வேகம் அதிகரித்தது. ஃபெரர் 5-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், கடும் காற்றின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

  இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு (இந்திய நேரப்படி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

  இதேபோல் சனிக்கிழமை நடைபெறவிருந்த அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்-பெலாரஸின் விக்டோரியா அசரென்கா இடையிலான மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

  கடந்த 5 ஆண்டுகளாகவே அமெரிக்க ஓபன் மழையால் பாதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. கடைசி 5 ஆண்டுகளில் 4 முறை இறுதி ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai