சுடச்சுட

  

  ஐ.பி.எல். தொடர்பான முடிவுகளில் அனைவருக்கும் பொறுப்புள்ளது

  Published on : 26th September 2012 11:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt3

  புது தில்லி, செப்.9: ஐபிஎல் போட்டி தொடர்பான முடிவுகள் அனைத்துமே பிசிசிஐ உறுப்பினர்கள் அடங்கிய ஐபிஎல் அமைப்பாலேயே எடுக்கப்பட்டது என்று ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.

  2009-ல் தென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டியை நடத்தியபோது ரூ.1,317 கோடி பணப் பரிமாற்றம் நடந்ததில் அன்னிய செலாவணி நிர்வாக சட்டம் மீறப்பட்டது தொடர்பாக விளக்கமளிக்குமாறு லலித் மோடி உள்ளிட்ட 7 பேருக்கு கடந்த ஆண்டு நவம்பரில் 11 நோட்டீஸ்களை அனுப்பியது அமலாக்கப் பிரிவு இயக்குநரகம்.

  இந்த நிலையில் லலித் மோடி சார்பில் அவரது வழக்குரைஞர், அமலாக்கப் பிரிவு இயக்குநரகத்துக்கு கடந்த 3-ம் தேதி பதில் அளித்துள்ளார். அதில், "ஐபிஎல் போட்டி தொடர்பான எல்லா முடிவுகளும் மோடி தலைமையிலான பிசிசிஐ உறுப்பினர்கள் அடங்கிய ஐபிஎல் நிர்வாகக் குழுவின் அனுமதி பெற்றே எடுக்கப்பட்டன. அது தொடர்பான ஆவணங்களை ஏற்கெனவே மோடி வழங்கியுள்ளார். எந்தவொரு முடிவையும் மோடி தனிப்பட்ட முறையில் எடுக்கவில்லை.

  தனிப்பட்ட முறையில் லலித் மோடி அன்னிய செலாவணி சட்டத்தை மீறியதாக அமலாக்கப் பிரிவு இயக்குநரகம் கண்டறியவில்லை. ஐபிஎல் அமைப்பு பிசிசிஐயின் துணைக் குழு மட்டுமே. அதனால் ஐபிஎல் அமைப்பால், பிசிசிஐயின் விவகாரங்களை கட்டுப்படுத்த முடியாது. நிதி விவகாரம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்க முடியாது.

  நிதி விவகாரங்கள் அனைத்தும் பிசிசிஐ தலைவரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. ஐபிஎல் தனி அமைப்பும் கிடையாது. தேவையற்ற காரணத்துக்காக விதிகளுக்கு முரணாக மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai