சுடச்சுட

  

  செஸ்டர்-லீ-ஸ்டிரீட், செப்.9: இங்கிலாந்துக்கு எதிரான முதல் இருபது ஓவர் சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா.

  முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

  இங்கிலாந்தின் செஸ்டர்-லீ-ஸ்டிரீட்டில் இரவு சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

  இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கீஸ்வெட்டர் மட்டுமே அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார்.

  மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 11, ரவி போபாரா 6, இயோன் மோர்கன் 10, பட்லர் 6, பேர்ஸ்டோவ் 15, படேல் 4 ரன்களில் ஆட்டமிழக்க 7 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது இங்கிலாந்து.

  இதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்டூவர்ட் பிராடும், கிரீம் ஸ்வானும் 8-வது விக்கெட்டுக்கு 33 ரன்கள் சேர்க்க 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்தது இங்கிலாந்து. பிராட், ஸ்வான் ஆகியோர் தலா 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

  தென் ஆப்பிரிக்கத் தரப்பில் ராபின் பீட்டர்சன், போத்தா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். டேல் ஸ்டெயின் 4 ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

  தென் ஆப்பிரிக்கா வெற்றி: 119 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவின் இன்னிங்ûஸ ரிச்சர்ட் லெவியும், ஜாக்ஸ் காலிஸýம் தொடங்கினர்.

  ரிச்சர்ட் லெவி 8 ரன்களில் வீழ்ந்தார். சர்வதேச அளவிலான இருபது ஓவர் போட்டியில் முதல் முறையாக களம் கண்ட டூ பிளெஸ்ஸிஸ் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த டூ பிளெஸ்ஸில் சிறப்பாக ஆடி ரன் குவித்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் வந்த கேப்டன் ஏ.பி.டிவில்லியர்ஸ் 10 ரன்களில் வெளியேற தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம் கண்டது. அந்த அணி 4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்திருந்தது.

  இதையடுத்து காலிஸýடன் ஜோடி சேர்ந்தார் ஜே.பி.டுமினி. தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய இந்த ஜோடி ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் குவிக்க, தென் ஆப்பிரிக்கா 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

  காலிஸ் 44 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 48 ரன்களும், டுமினி 54 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் டெர்ன்பார்ச் 2 விக்கெட் எடுத்தார். டேல் ஸ்டெயின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

  இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட இருபது ஓவர் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஆட்டம் திங்கள்கிழமை (செப்.10) நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai