சுடச்சுட

  

  புது தில்லி, செப்.9: லண்டன் பாரா ஒலிம்பிக் போட்டி ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவடைந்தது.

  இதையடுத்து 10 வீரர், வீராங்கனைகள் உள்பட 33 பேர் அடங்கிய இந்திய பாரா ஒலிம்பிக் விளையாட்டு குழு செவ்வாய்க்கிழமை காலையில் தில்லி திரும்புகிறது. பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற ஒரே வீரரான கிரிஷா உள்ளிட்ட அனைவருக்கும் விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் கிரிஷா வெள்ளிப் பதக்கம் வென்றார். வேறு யாருக்கும் பதக்கம் கிடைக்கவில்லை.

  முன்னதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான், இந்திய பாரா ஒலிம்பிக் குழுவை சனிக்கிழமை லண்டனில் சந்தித்துப் பேசினார். அப்போது போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் வேலை வழங்கப்படும் என்று மக்கான் உறுதியளித்தார். இலவச நுழைவு சீட்டை பாரா ஒலிம்பிக் கமிட்டியினர் பயன்படுத்திக் கொண்டு வீரர்களின் உதவியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பாரா ஒலிம்பிக் கிராமத்திற்கு வெளியில் நிறுத்திவிட்டதாக ஃபர்மான் பாஷா என்ற வீரர் புகார் தெரிவித்தது தொடர்பாக மக்கான் விளக்கம் கேட்டிருந்தார். அதற்கும் இந்த சந்திப்பின்போது மக்கானிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

  பாஷாவுடன் லண்டன் வந்திருந்த அவருடைய மனைவி மற்றும் தனிப் பயிற்சியாளருக்கான அனைத்து செலவுகளையும் பாரா ஒலிம்பிக் கமிட்டி பார்த்துக் கொண்டது. ஆனால் பாஷா தேவையில்லாமல் இவ்வாறு பிரச்னையை கிளப்பியுள்ளார் என்று அவரிடம் பாரா ஒலிம்பிக் கமிட்டியினர் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai