சுடச்சுட

    

    முருகப்பா கோப்பை ஹாக்கி: ஐ.ஓ.சி.யிடம் தடம்புரண்டது ஐ.சி.எஃப்.

    Published on : 26th September 2012 11:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    spt6

    சென்னை, செப்.9: சென்னையில் நடைபெற்று வரும் முருகப்பா கோப்பை ஹாக்கிப் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஐ.ஓ.சி. அணி 15-3 என்ற கோல் கணக்கில் ஐ.சி.எஃப். அணியை வீழ்த்தியது.

    87-வது முருகப்பா கோப்பைக்கான தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    போட்டியின் 4-வது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐ.ஓ.சி மற்றும் ஐ.சி.எஃப். அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஐ.ஓ.சி. அணி அபாரமாக விளையாடியது.

    இதனால் 7, 11 மற்றும் 12-வது நிமிடங்களில் அந்த அணிக்கு கோல் கிடைத்தது. இதனால் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 5-2 என்ற கோல் கணக்கில் ஐ.ஓ.சி. முன்னிலை பெற்றது.

    பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் ஐ.ஓ.சி.யின் ஆதிக்கமே தொடர்ந்தது. இதனால் அந்த அணி மேலும் 10 கோல்களை அடித்தது. அதேநேரத்தில் ஐ.சி.எஃப். அணியால் ஒரு கோல் மட்டும அடிக்க முடிந்தது. இறுதியில் ஐ.ஓ.சி. அணி 15-3 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

    ஐ.ஓ.சி. தரப்பில் தீபத் தாக்குர் அதிகபட்சமாக 3 கோல் அடித்தார். ரகுநாத், பிரப்ஜோத் சிங், ரோஷன் மின்ஸ் ஆகியோர் தலா இரு கோல் அடித்தனர்.

    ஓ.என்.ஜி.சி.-பி.என்.பி. ஆட்டம் டிரா: மற்றொரு லீக் ஆட்டத்தில் ஓ.என்.ஜி.சி.-பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) அணிகள் மோதின. இந்த ஆட்டம் 3-3 என்ற கணக்கில் டிராவில் முடிந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai