சுடச்சுட

  
  spt7

  ஷாங்காய், செப்.9: சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் இறுதிச்சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-திவிஜ் சரண் ஜோடி தோல்வி கண்டது.

  இந்த ஜோடி 4-6, 4-6 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் சஞ்ஜய்-ரதிவதனா ஜோடியிடம் தோல்வி கண்டது.

  இந்தியாவின் இளம் வீரர்களான யூகி பாம்ப்ரியும், திவிஜ் சரணும் டேவிஸ் கோப்பை போட்டியில் விளையாடவுள்ள நிலையில், ஷாங்காய் சேலஞ்சர் போட்டி அவர்களுக்கு நல்ல அனுபவமாக அமைந்துள்ளது.

  ஷாங்காய் சேலஞ்சர் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியதன் மூலம் இந்திய ஜோடிக்கு ரூ.2.35 லட்சம் பரிசுத் தொகையும், 48 தரவரிசைப் புள்ளிகளும் கிடைத்துள்ளன. இந்தப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற யூகி பாம்ப்ரி 2-வது சுற்றில் சகநாட்டு வீரரான சனம் சிங்கிடம் தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai