சுடச்சுட

  
  9spt4

  புது தில்லி, செப். 10: சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இணைந்தார் சச்சின் டெண்டுல்கர். திங்கள்கிழமை காலை அவர் பேஸ்புக் கணக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவரது பக்கத்தை "லைக்' செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  சச்சினின் பெயரில் ஏற்கெனவே ஏராளமான பேஸ்புக் பக்கங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அவரது ரசிகர்களால் உருவாக்கப்பட்டவை. இப்போதுதான் சச்சின் பேஸ்புக்கில் இணைந்துள்ளார். டுவிட்டரில் 2010-ம் ஆண்டிலேயே சச்சின் இணைந்துவிட்டார். இப்போது வரை அவரை சுமார் 27 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். தான் பேஸ்புக்கில் இணைந்ததை டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.

  கிரிக்கெட் தொடர்பான விடியோக்கள், கிரிக்கெட் வீரர்களின் சிறப்பான புகைப்படங்கள் ஆகியவை சச்சினின் பேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. தனது 23 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை, இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபோது தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி ஆகியவற்றை ரசிகர்களுடன் சச்சின் பகிர்ந்து கொண்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai