சுடச்சுட

  

  மாநில விளையாட்டு: கூடைப்பந்து, வாலிபால் போட்டியில் சென்னை அணிகள் சாம்பியன்

  Published on : 26th September 2012 11:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஈரோடு, செப். 10: பெருந்துறையில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து, வாலிபால், கபடி மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் சென்னை கல்லூரி அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றன.

  ஈரோடு மாவட்டம், பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கியது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 75 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 2,000 வீரர்கள் பங்கேற்றனர். நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

  போட்டிகளில் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் விவரம்: கூடைப்பந்து (ஆண்கள்): சத்தியபாமா பல்கலை., லயோலா கல்லூரி (சென்னை). பெண்கள் பிரிவு: எஸ்.ஆர்.எம். பல்கலை., புனித ஜோசப் பொறியியல் கல்லூரி (சென்னை).

  வாலிபால் (ஆண்கள்): எஸ்.ஆர்.எம். பல்கலை., பனிமலர் பொறியியல் கல்லூரி (சென்னை). பெண்கள் பிரிவு: வேல்ஸ் பல்கலை., புனித ஜோசப் பொறியியல் கல்லூரி (சென்னை).

  கபடி (ஆண்கள்): டி.பி. ஜெயின் கல்லூரி (சென்னை), புனித ஜோசப் பொறியியல் கல்லூரி (சென்னை).

  இறகுப்பந்து (ஆண்கள்): எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி (சென்னை), பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி (கோவை). பெண்கள் பிரிவு: எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பல்கலை. டேபிள் டென்னிஸ் (ஆண்கள்): லயோலா கல்லூரி, எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி. பெண்கள் பிரிவு: புனித ஜோசப் பொறியல் கல்லூரி, எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி.

  போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் கே.அங்கமுத்து பரிசுகளை வழங்கினார். கொங்கு பொறியியல் கல்லூரி முதல்வர் எஸ். குப்புசாமி, கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவர் தமிழரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai