சுடச்சுட

  

  முருகப்பா கோப்பை ஹாக்கி: ஓ.என்.ஜி.சி.-ராணுவ லெவன் ஆட்டம் டிரா

  Published on : 26th September 2012 11:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  9spt5

  சென்னை, செப். 10: முருகப்பா கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஓ.என்.ஜி.சி-ராணுவ லெவன், ஐ.ஓ.பி.-பி.என்.பி. அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

  87-வது முருகப்பா கோப்பைக்கான தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

  முதல் ஆட்டம் டிரா: போட்டியின் 5-வது நாளான திங்கள்கிழமை நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஓ.என்.ஜி.சி.-ராணுவ லெவன் அணி ஆகியவை மோதின. இரு அணிகளுமே அபாரமாக ஆடியதால் தொடக்கம் முதலே ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

  ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் ராணுவ லெவன் அணிக்கு கோல் கிடைத்தது. இந்த கோலை சிராஜு அடித்தார். பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய சிராஜு அதை கோலாக மாற்றினார். இதன்பிறகு ஓ.என்.ஜி.சி. கடுமையாகப் போராடியபோதும் முதல் பாதி ஆட்டம் முடியும் வரை கோலடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ராணுவ லெவன் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

  2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே  (38-வது நிமிடம்) ஓ.என்.ஜி.சி.யின் கடும் போராட்டத்துக்கு பலன் கிடைத்தது. அந்த அணியின் ககன்தீப் கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன. இதன்பிறகு இரு அணிகளும் கடுமையாகப் போராடியதால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. ஆனாலும் இதன்பிறகு எந்த அணிக்கும் கோல் கிடைக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

  இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஓ.என்.ஜி.சி.5 புள்ளிகளுடன் உள்ளது.  ஓர் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. 2 ஆட்டங்களில் டிரா செய்துள்ளது.

  ராணுவ லெவன் அணி இதுவரை விளையாடியுள்ள 2 ஆட்டங்களிலும் டிரா செய்து 2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

  2-வது ஆட்டம்:  மற்றொரு லீக் ஆட்டத்தில் பஞ்சாப் நேசனல் வங்கி (பி.என்.பி)- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிகள் மோதின. மழைக்கு மத்தியில் நடைபெற்றாலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த ஆட்டம் இருந்தது.

  இரு அணி வீரர்களுமே சவால் அளிக்கும் வகையில் விளையாடியதால் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் கோல் கிடைக்கவில்லை.

  பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் ஐஓபி அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த அணியின் ரூபிந்தர்பால் சிங் கோலடித்தார். இதன்மூலம் ஐஓபி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் இந்த முன்னிலை நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

  47-வது நிமிடத்தில் பி.என்.பி. வீரர் பன்மாலி ùஸஸ் அதிவேகத்தில் பீல்டு கோலடிக்க இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டின.

  கடைசி 10 நிமிட ஆட்டம் பரபரப்பாக சென்றது. இரு முறை கோலடிக்கும் வாய்ப்பை கோல் கம்பத்தின் அருகே கோட்டைவிட்டது ஐ.ஓ.பி. இந்த இரு வாய்ப்புகளுமே நூலிழையில் நழுவின. 69-வது நிமிடத்தில் பி.என்.பி.யின் கோல் முயற்சியை ஐ.ஓ.பி. கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ் அற்புதமாக தடுத்தார்.

  இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள பி.என்.பி. அணி அனைத்தையும் டிரா செய்து 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஐஓபி அணி 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு டிரா, 2 தோல்விகளுடன் ஒரு புள்ளியை மட்டுமே பெற்றுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai